
பாரதூரமான ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இம்முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காலஎல்லை எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
ஆகவே அதற்கு முன்னர் தமது முறைப்பாடுகள், தகவல்கள் ஆகியவற்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதன் செயலாளர் திரு.எச்.டப்ளியு.குணதாச பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment