விவசாயிகளுக்கான உர நிவாரணத்திற்கான நிதி ஏப்ரலில்! - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 18, 2016

விவசாயிகளுக்கான உர நிவாரணத்திற்கான நிதி ஏப்ரலில்!

விவசாயிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதிக்குள் உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதனூடாக விவசாயிகளுக்கு தமக்கு தேவையானவாறு இரசாயண பசளையோ இயற்கை பசளையோ பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பசளை நிவாரணங்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவென பிரதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உர மானியத்தின் கீழ் உரம் வழங்குவதங்கு பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு தற்போதய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here