தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா அறபுக் கலாபீட (சம்மாந்துறைக் கிளையின்) மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் 12.02.2016ம் திகதி மாலை 02.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.இப்றாஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க். எம்.ஐ. அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப். ஏ. மன்சூர் மற்றும்  தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியிலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல் ஆகியோரும் விஷேட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அரபுக் கலாபீட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது. அரபுக்கலாபீடங்களும் இப்போது இனணப்பாடவிதான செயற்பாடுகளில் கவனம் செலுத்த முற்பட்டுள்ளமை பாராட்டுக்குறியதாகும்.
சபா (மஞ்சள்), மர்வா (பச்சை) எனும் இரு இல்லங்களாக பங்குபற்றிய கலாபீட மாணவர்கள் சகலரும் மிகவும் ஆர்வமாக போட்டி நிகழ்சிகளில் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிக்காட்டியமை பார்வையாளர்களை மிகவும் உற்சாகத்துக்குள்ளாக்கியமையை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.
இப்போட்டியில் மர்வா இல்லம் 67 மேலதிக புள்ளிகளை பெற்று  வெற்றிக் கேடயத்தை கைப்பற்றிக்  கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன



No comments:
Post a Comment