நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மின் தடை தொடர்பில் ஆராய ஜெர்மனி மற்றும் ஜப்பான் நிபுணர்கள் குழு இன்று (21) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இக்குழுவினர் வெடிப்புக்கள் இடம்பெற்ற உப மின்நிலையங்கள் உட்பட 30 உபமின்நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராயவுள்ளது மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
பியகம மற்றும் கொட்டுகொட உபமின்நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களுக்கான காரணங்களை ஆராய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். மின்சாரத் துண்டிப்புக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை குறித்த குழுவினர் அமைச்சுக்கு வழங்கவுள்ளனர்.
No comments:
Post a Comment