''மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டி யில் நாங்கள் 20 முதல் 30 ஓட்டங்க ளைக் குறைவாக எடுத்தோம். அத்துடன் களத்தடுப்பு படுமோசமாக இருந்தது'' என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத் யூஸ் தெரிவித்தார்.
பெங்களூர் சின்னசுவாமி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணத்தை ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
''இப்போட்டியில் 150 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கினோம். ஆனால், நாங்கள் 20 முதல் 30 ஓட்டங்கள் குறைவாக எடுத்தோம்.
எமது களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. எமது முன்வரிசையும் காலை வாரியது. இந்த நாள் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது'' என்றார்.
உபாதை காரணமாக களத்தடுப்பின்போது வெளியேறியதால் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரராக களம் இறங்கமாட்டார் என்பதை அறிந்ததால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தீர்கள் எனக் கேட்டபோது, ''கெய்ல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கமாட்டார் என்பதாலும் 10. 12 ஓவர்கள் வரை அவரால் களம் இறங்க முடியாது என்பதாலும் மூன்றாவது ஓவரிலிருந்து சுழல்பந்து வீச்சாளர்களை பந்து வீச அழைத்தேன். வெண்டர்சே திறமையாக பந்துவீசினார்.
மற்றையவர்களும் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டனர். ஆனால் களத்தடுப்பு மிகவும் மோசம். பயிற்சிகளின்போது திறமையை வெளிப்படுத்துபவர்கள் முக்கிய போட்டியின்போது கோட்டை விட்டுவிடுகின்றனர்'' என்றார்.
திலகரட்ன டில்ஷான் ஆட்டமிழந்த விதம் குறித்து கேட்டபோது,
''மத்தியஸ்தரின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு. அது குறித்து விமர்சிக்கவோ கருத் துக் கூறவோ முடியாது. ஆனால், அந்த ஆட்டமிழப்பு எமக்கு பேரிழப்பாகவும் துரதிருஷ்டவசமாகவும் அமைந்தது” என பதிலளித்தார்.
''மத்தியஸ்தரின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு. அது குறித்து விமர்சிக்கவோ கருத் துக் கூறவோ முடியாது. ஆனால், அந்த ஆட்டமிழப்பு எமக்கு பேரிழப்பாகவும் துரதிருஷ்டவசமாகவும் அமைந்தது” என பதிலளித்தார்.
''முன்வரிசை வீரர்கள் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழந்ததால் மத்திய வரிசையில் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத் தும் பொருட்டு நானும் திசர பெரேராவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க நேரிட்டது.
குறிப்பாக திசர பெரேரா திறமையாக துடுப் பெடுத்தாடியிருந்தார், எனினும் எங்களால் கணிசமான ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது'' எனவும் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment