முஸ்லிம்களுக்கென பாடசாலையும் வங்கியும் தனித்து இயங்குவது ஆபத்து - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 21, 2016

முஸ்லிம்களுக்கென பாடசாலையும் வங்கியும் தனித்து இயங்குவது ஆபத்து

பொதுபலசேனாவின் நிறைவேற்று பணிப்பாளர்

நாட்டின் கல்வி முறையில் முஸ்லிம் பாட­சா­லைகள்,சிங்­கள பாட­சா­லைகள் என வேறு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தி­னாலேயே  முஸ்­லிம்­க­ளுக்கும் பெளத்­தர்­க­ளுக்­கு­மி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டா­தி­ருக்­கி­றது.

இதே­போன்று வங்கி முறை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யாக ஷரீஆ வங்கி முறைமைஉள்­ளமை நல்­லி­ணக்­கத்­துக்கு ஆபத்­தா­ன­தாகும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பு நாட்டில் ஷரீஆ வங்கி முறை­மையை எதிர்ப்­ப­தற்­கான கார­ணங்­களை விளக்­கு­கை­யிலே மேற்­கண்­ட­வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,
நாட்டில் நல்­லி­ணக்கம் சக வாழ்வு உரு­வாக வேண்டும் என்றே பொது­ப­ல­சேனா அமைப்பு விரும்­பு­கி­றது. இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­பட நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மா­ன­வைகள் களை­யப்­பட வேண்டும். இத­ன­டிப்­ப­டை­யிலே நாம் ஷரீஆ வங்கி முறையைத் தடை­செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கோரி­யுள்ளோம். இலங்­கையில் ஷரீஆ வங்கி முறை சட்­ட­ரீ­தி­யா­ன­தாக இருக்­கலாம். மத்­திய வங்­கியும் அனு­மதி வழங்­கி­யி­ருக்­கலாம் என்­றாலும் அவ் வங்கி முறை இன­நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மென்றால் தடை­செய்­யப்­பட வேண்டும்.
முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர் ஷரீஆ வங்கி முறை­மையைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக ஜனா­தி­ப­தியைச் சந்­திக்­க­வுள்­ள­தாக அறி­கிறோம். இதனை நாம் எதிர்க்­க­வில்லை. அவர்கள் தமது சமூ­கத்­துக்­காக ஜனா­தி­ப­தியைச் சந்­திக்­க­வுள்­ளார்கள். ஆனால் எமது சிங்­கள அர­சியல் வாதிகள் சிங்­க­ள­வர்கள் தொடர்பில் அக்­க­றை­யில்­லாமல் இருப்­பது குறித்து நாம் கவலையடைகிறோம்.
ஷரீஆ வங்கி முறைக்கு எதிராக நாம் ஜனாதிபதியிடம் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் விழிப்பாக இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here