கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone SE ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.
விழாவை அப்பிள் சி.இ.ஓ. டிம் குக் தொடங்கிவைத்து பேசினார் அப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் நடந்துவரும் சட்ட போராட்டங்கள் பற்றி டிம் குக் இதன் போது பேசியுள்ளார் பின்னர் புதிய iPhone SE வெளியிடப்பட்டது.
iPhone SE முக்கிய அம்சங்கள்:
64-பிட் அப்பிள் ஏ9 செயலி, 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரெம், 12 மெகா பிக்சல் கெமரா, Hey Siri, லைவ் போட்டோ, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் புளூடூத் (4.2), மேம்படுத்தப்பட்ட வை-பை, புதிய மைக்ரோ போன், பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய அப்பிள் பே ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.
16 ஜி.பி. போனின் விலை 399 டொலராகவும், 32 ஜி.பி. போனின் விலை 499 டொராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iPhone SE போனானது iPhone 6S போனை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. iPhone SE போன் மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஏனைய நாடுகளில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment