மாளிகா மண்ணும் மழுங்கடிக்கப்படும் உண்மைகளும் - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2018

மாளிகா மண்ணும் மழுங்கடிக்கப்படும் உண்மைகளும்

தொடர் 01
தற்கால அரசியல் நிலைமை
(உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பானது)
பொதுவாக இலங்கையின் சகல பாகங்களைப் பொருத்தமட்டிலும் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலைப் பொருத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது.
ஒரு புறம் ஆட்சியின் பலத்தை பரிசோதிக்கும் மஹிந்த - மைத்திரி - ரணில் முத்தரப்பு போட்டியாகவும் மறுபுறம் தீவின் பல்வேறு பகுதிகளிலும் சுயேட்சைக் குழுக்கள் பல கழமிறங்கி மூத்த பல தலைமைகளுக்கு சவாலாகவும் திகழ்கிறது.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் பல் கட்சி போட்டித் தன்மையை பரவலாக அவதானிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை பொருத்தவரை தனியான உள்ளுராட்சி மன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.
கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்டிருக்கக் கூடிய சாயந்தமருது பிரதேச மக்கள் தங்களுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தை வழங்குமாறு வலியுருத்தி அன்மைக்காலமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை நாம் அறிந்ததே. இந்நிலையில் இப் போராட்டத்தை மேலும் வலுசேர்க்கும் முகமாக நிறைவேற்றப்பட்ட சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரகடனத்திற்க அமைய சாய்ந்தமருது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை எனவும், இம்முறை நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது எனவும் மக்கள் மன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் காரைதீவு பிரதேச சபைப் பிரிவின் எல்லைக்குட்பட்ட நிலத் தொடர்பில் சாய்ந்தமருதை அடுத்திருக்கும் முஸ்லிம் பிரதேசமாகிய மாளிகைக்காடு எனும் ஊரும் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந் நிலையில் மாளிகைக்காடு மக்கள் மன்றில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றலில் சேகரிக்கப்பட்ட கருத்துக்களை கேள்வி - பதில் என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
(இக் கட்டுரையை பொருமையாகவும் சுய சிந்தனையுடனும் வாசிக்குமாறு பனிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.)
* கேள்வி : (01)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு தொடர்பு நிலை எவ்வாறு பட்டது?
பதில் :
நிலத் தொடர்பு அடிப்படையில் சாய்ந்தமருதுக்கு அடுத்து காணப்படுகின்ற ஓர் முஸ்லிம் கிராமம் ஆகும். அதே போல் கிழக்கில் கடலையும், தெற்கில் காரைதீவு எனும் ஊரையும், மேற்கில் வயல் பரப்பையும் கொண்ட பிரதேசமாகும்.
இந்நிலையில் சாய்ந்தமருதை அடுத்து காணப்படும் ஒரே முஸ்லிம் பிரதேசம் என்பதால் சமயம் சார்ந்த விடயங்களில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை என்றும் , பள்ளி நிர்வாகங்கள் என்றும் நிர்வாக கட்டமைப்பு முறைகள் காணப்படுகின்றன.
(இதற்கு அப்பால் தனியான ஊர் பள்ளி நிர்வாகமாக அந் நூர் ஜூம்ஆப் பள்ளிவாயல் தனித்தும் காணப்படுகிறது. இது தொடர்பான தகவல் பின்னால் வளங்கப்பட்டுள்ளது.)
அதே போல் இவ்விரு பிரதேச மக்களிடையே பரஸ்பரமான உறவு முறைகளும் காணப்படுகின்றன. ஆக மொத்தத்தில் எவ்வித முறன்பாடுகளும் அற்ற நிலை காணப்படுகிறது. (அரசியலில் தவிர)
* கேள்வி : (02)
சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை தொடர்பான மாளிகைக்காடு மக்களின் நிலை எவ்வாறு உள்ளது?
பதில் :
மாளிகைக்காடு பிரதேச மக்களை பொருத்தவரையில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வர வேண்டும் என்ற கருத்தை பெரிதும் வரவேற்று ஆதரிக்கும் மனநிலையில் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
குறிப்பாக இதற்காக நடாத்தப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் மாளிகைக்காடு மக்களின் பங்கு பெரிதும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
சாயந்தமருது உள்ளுராட்சி மன்றம் என்பது அவர்களுடைய ஆசை அதை ஒரு போதும் மாளிகைக்காமு மக்கள் எதிர்கப்போவதில்லை.
* கேள்வி : (03)
உள்ளுராட்சி மன்றத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில் சாய்ந்தமருதில் போட்டியிடும் சுயேட்சைக் குழு போன்று மாளிகைக்காட்டிலும் போட்டியிட சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவால் வேட்பாளர்கள் போடப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்கள் நிலைப்பாடு என்ன?
பதில் :
ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்று சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பில் மாளிகைக்காடு மக்கள் எதிர்பைக்காட்டாது ஆதரவை வெளிப்படுத்துவது உண்மை தான். ஆனாலும் சாய்ந்தமருது பிரதேசம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்டது. ஆனால் மாளிகைக்காடு பிரதேசமோ பொத்துவில் தேர்தல் தொகுதியின் கீழ் வருகின்ற காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்டது முதலாவது விடயம்.
அடுத்து காரைதீவு பிரதேச சபையை பொருத்தவரையில் அதிகூடுதலாக 04 முஸ்லிம் பிதிநிதிகளை மாத்திரமே சபைக்கு அனுப்பக் கூடிய நிலையில் (அதில் 02 பிரதிநிதிகள் போனஸ் மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கு உரியவர்கள்.) முஸ்லிம் பிரதேச அபிவிருத்திக்கான பங்களிப்பு வழுவற்று இருக்கும் நிலையை அவதானிக்க முடியும்.
அந்தவகையில் இம்முறை உதாரணமாக சுயேட்சைக்குழு அனைத்து (04) ஆசனங்களையும் கைப்பற்றும் என்றால்
மாளிகைக்காடு - மாவடிப்பள்ளி ஆகிய வளர்ச்சி கண்டுவரும் முஸ்லிம் பிரதேச அபிவிருத்தியை கொண்டு செல்வது யார்?
அபிவிருத்நிதிக்திகான யை பெற்றுக் கொள்வதன் வழிமுறை என்ன?
உள்ளுராட்சி சபையை சுயேட்சை வெற்றி பெற்றால் மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல் போன்றவற்றில் சுயேட்சை சாத்தியமாகுமா?
ஊருக்கான பிரதிநிதி என்றவகையில் யாரிடம் அபிவிருத்தியை வேண்டுவது? சுயேட்சைக் குழுவால் அபிவிருத்திக்கான நிதி சாத்தியப்படுமா?
பிரதேச சபையால் ஒழுங்கான நிதி கடந்த காலங்களில் ஒழுங்காக ஒதுக்கப்படாத நிலையில் எந்த பலத்தைக் கொண்டு அதை வேண்டுவது?
ஆக இது போன்ற பல கேள்விகளுக்கு (சமாளிப்புக்கான உணர்வு ரீதியான பதில்களை தவிர வேறு) பதில்கள் இல்லாத நிலையில் மாளிகைக்காடு பிரதேச மக்கள் சுயேட்சையை ஆதரிப்பதில் எந்த பயனும் இல்லை.
மாறாக ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்கும் பட்சத்தில் அதற்கான நிதிகளை குறைந்தபட்சம் கட்சிகளிடமாவது பெற்றுக்அகாள்ள முடியும்.
* கேள்வி : (04)
மாளிகைக்காடு மக்கள் சுயேட்சையை ஆதரிக்காது விட்டால் சாய்ந்தமருது மக்களால் கூறப்படும் ஒற்றுமைப் போராட்ட கோசத்திற்கான நிலை?
பதில் :
நிச்சயமாக மாளிகைக்காடு மக்கள் சுயேட்சையை ஆதரிக்காது விட்டால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும். ஆனால் அவர்கள் தனியான உள்ளுராட்சி மன்றத்தை வேண்டுவதன் நோக்கமே அபிவிருத்தியில் உள்ள குறைபாடுதான். அதே நிலைதான் சுயேட்சையை ஆதரிக்கின்ற போது மாளிகைக்காடு பிரதேசத்திற்கும் ஏற்படும். எனினும் மாளிகை்காட்டில் சுயேற்சை வெற்றி பெருவதால் ஊருக்கும், சாய்ந்தமருது மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை. இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை நம்புகிறோம்.
* கேள்வி : (05)
ஒருவேளை சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கப்பெற்றால் மாளிகைக்காடு சாய்ந்தமருதோடு இணைக்கப்பட்டு மேலே (கேள்வி 03 இல்) கூறப்பட்ட அபிவிருத்தி தொடர்பான நிலை நிவர்த்தி செய்யப்படலாம் தானே? அத்தோடு மாளிகைக்காடு மக்களும் தனியான முஸ்லிம் பிரதேச ஆட்சிக்கு உட்பட்டு அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும் தானே?
பதில் :
அருமையான திட்டம் தான் ஆனால் அதற்கு காரைதீவு பிரதேச சபை இடமளிக்காது என்பது வெளிப்படை உண்மை. காரணம் காரைதீவு பிரதேச சபையை நிந்தவூரில் இருந்து பிரிக்கும் போது தற்போது சாய்ந்தமருது மக்களால் தனியான உள்ளுராட்சி சபைக்காக வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
அதே போல் அவ்வாறு முஸ்லிம் பிரதேசங்கள் காரைதீவு பிரதேசத்தில் இருந்து விடுபட்டால் காரைதீவு பிரதேச சபை மீண்டும் நிந்தவூர் பிரதேச சபையுடன் இணைக்கும் நிலை வரலாம். அதை அவர்கள் ஒரு போதும் எற்கப் போவதும் இல்ல. (காரைதீவு பிரதேசம் நிலப்பரப்பில் பரந்திருந்தாலும் சனத்தொகையில் குறைவாக காணப்படுகிறார்கள்.)
ஆனால் சாய்நந்தமருதுடன் இணைக்கப்படும் நிலைவந்தால் மக்கள் அந்த தருனத்தில் அதற்கான தீர்வை பற்றி யோசிப்பார்கள்.
* கேள்வி : (06)
இறுதியாக மாளிகை்காடு மக்களுக்கு சொல்ல விரும்பும் கருத்து?
பதில் :
மாளிகைக்காடு சிறிய பிரதேசமாக இருந்தாலும் அதன் அபிவிருத்தியை மாளிகைக்காட்டு மக்கள் விரும்பத் தான் செய்வர்.
ஆகவே சுயேட்கை் குழுவை ஆதரிப்பதில் எமக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எனவே தத்தமது வட்டாரங்களுக்கு பொருத்தமான உரிய கட்சிகளுக்கு வாக்களித்து பிரதேச அபிவிருத்தியில் பங்காளர்களாவோம்.
* கேள்வி : (07)
சாய்ந்தமருது மக்களுக்கு சொல்ல விரும்பும் கருத்து?
பதில் :
உமது கோரிக்கை நியாயமானதே. அதனால் தான் எமது முழு ஒத்துழைப்பையும் உமக்கு வழங்கினோம். ஆனால் தேர்தல் என்பது எமது அபிவிருத்தியுடன் தொடர்புபட்டது தயவு செய்து அதற்காய் நாம் எடுக்கும் முயற்சியில் உமக்கு எதிரானவர்களாய் எம்மை நோக்காதிருங்கள்.
இது போன்று அநேக கருத்துக்களும் , கேள்விகளும் இருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவற்றை தவிர்த்து நிறைவு செய்து கொள்கிறேன்.
அத்தோடு நான் எந்தக் கட்சி சார்ந்தவனும் அல்ல என்பதோடு மாளிகைக்காடு பிரதேச குடிமகன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் மேலான் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
என்றும் உங்கள் அன்புடன்
இர்பானுடீன் முஹம்மட்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here